https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2020/jan/28/லார்டு-ரூதர்-போர்டு-அணுவைப்-பிளந்த-அறிஞர்---முகலியபெருமாள்-3342844.html
லார்டு ரூதர் போர்டு: அணுவைப் பிளந்த அறிஞர் - மு.கலியபெருமாள்
By DIN | Published on : 28th January 2020 03:02 PM |

இன்று எங்கு பார்த்தாலும் அணுவைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அணு உலை, அணு மருந்துகள், அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல், மின்சார நிலையங்கள் இவை போன்ற பலவற்றை நமக்கு அளித்திருக்கிறது அணு அறிவு. அணுவின் அமைப்பு, அதன் இயக்கம் என்ன என்பதை அறியாத பாமரனும் அணுகுண்டைப் பற்றியும் அதன் ஆற்றலைப் பற்றியும் தெரிந்திருக்கிறான். இவற்றிற்கெல்லாம் மூலகாரணமானவர் அணுவின் உள் அமைப்பினை எடுத்துக்காட்டி, அதனைப் பிளப்பதால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலைப் பயன்படுத்தும் முறைக்கு வித்திட்ட லார்டு ரூதர் போர்டு (Lord Ruther Ford) என்னும் பேரறிஞர் ஆவார்.
லார்டு ரூதர் போர்டு நியூசிலாந்தின் தெற்குத் தீவில் 1871 }ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 30}ஆம் நாள் பிறந்தார்.
அவருடைய தந்தை ஓர் உழவர். தாய் ஒரு பள்ளியில் ஆசிரியர். சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போதே இவர் வகுப்பில் தலைசிறந்த மாணவராக இருந்தார். எல்லாப் பாடங்களிலும் மற்ற மாணவர்களைவிட மிகுந்த மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர், பெற்றோர் ஆகியோரின் பாராட்டுதலைப் பெற்றார்.
இளமையிலேயே முதல் தரமான ஒளிப்படக் கருவி (Camera) ஒன்றைச் செய்தார். மணிப்பொறி, மாதிரி நீர்ச் சக்கரங்கள் (Water wheels) இவை போன்ற பல கருவிகளை ஆக்கும் திறன் இளமையிலேயே இவரிடம் இயல்பாக இருந்தது.
இவ்வாறு இளமையிலேயே அறிவொளியோடு திகழ்ந்த இவர் தன் பெற்றோருக்குச் செய்யும் உதவியை மறக்கவில்லை.
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல்' என்ற செம்மொழிக் கேற்ப, அவர் பெற்றோருக்குப் பெருமை தேடித் தந்தார். இயற்பியலில் (Physics) இவர் நோபல் பரிசு பெற்றதையும் தாம்சனுக்குப் பிறகு காவன்டிஷ் ஆய்வுக் கூடத்தில் பேராசிரியர் பொறுப்பினை ஏற்றதையும் அவருடைய தந்தை கண் குளிரக் கண்டார். ரூதர் போர்டுக்கு லார்டு என்ற பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியதைக் கண்டு அவருடைய தாய் பெரு மகிழ்ச்சி கொண்டார்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்காக ரூதர் நியூசிலாந்தைவிட்டு 1895-ஆம் ஆண்டு, இங்கிலாந்து வந்தார். புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலுள்ள காவன்டிஷ் ஆய்வுக் கூடத்தில் அவர் சேர்ந்தார். எந்தப் பட்டமும் பெறாத மாணவர்கள் அங்கு வந்து ஆராய்ச்சி செய்து பட்டம் பெறும் ஒரு பெரும் வாய்ப்பினை அந்தப் பல்கலைக் கழகம் அளித்திருந்தது.
காவன்டிஷ் ஆய்வுக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த அவர் அடுத்த ஆண்டிலேயே ஜே.ஜே. தாம்சனுக்குத் துணையாகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். இந்த நேரத்தில், அதாவது 1898}இல் அவர் வெளியிட்ட ஆராய்ச்சி அறிவியல் வரலாற்றில் ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்றது. இவரது ஆராய்ச்சி வெளியாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு அறிவியல் வல்லுநராகிய கென்ரிபெக்கெரல் (Henri Becqurel) யுரேனியத்திலிருந்து ஒருவகை கதிர்வீச்சு வருகிறது என்று கூறினார். ஆனால் அது என்ன கதிர்வீச்சு என்று அவரால் விளக்க முடியவில்லை. இந்தக் கதிர் யாருக்கும் புரியாத ஒரு புதிராக இருந்தது. சாதாரண ஒளிக் கதிர்கள் செல்ல முடியாத இடங்களிலும் ஊடுருவிச் சென்று காகிதத்தால் மூடி வைக்கப்பட்ட ஒளிப்படத்தட்டுகளை (Photographic plates) இந்தக் கதிர்வீச்சு கருப்பு நிறமாக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தது. இந்தக் கதிர்வீச்சுகளைப் பற்றி ஆராய்ந்த ரூதர், இவற்றில் குறைந்தது இரண்டு கதிர்வீச்சுகள் (Radiations) இருக்கின்றன என்று வெளியிட்டார். ஒன்று மிகுந்த ஆற்றலோடு குறைந்த தொலைவு வீசுவது (High- EnergyShort- Range Radiation); இதற்கு ஆல்பா கதிர்வீச்சு (Alpha Radiation) என்று பெயரிட்டார். மற்றொன்று, குறைந்த ஆற்றலோடு மிகுந்த தொலைவு வீசுவது (Lower- Energy Longer- Range Radiation) இதனைப் பீட்டா கதிர்வீச்சு (Beta Radiation) என்று அழைத்தார். ஆனால், யுரேனியத்திலிருந்து காமா கதிர்வீச்சு (Gama Radiation) வருவதை அப்பொழுது கண்டுபிடிக்கவில்லை.
இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பிறகு மாக்கில் பல்கலைக்கழகத்தில் (Mc Gill University) பேராசிரியர் பொறுப்பினை ஏற்கும் வாய்ப்பைப் பெற்றார். 27 வயதே நிரம்பிய ரூதர் அரிய முயற்சியால் பெரும் பொறுப்பினை ஏற்றார்.
மாக்கில் பல்கலைக்கழகத்திற்கு வந்த ரூதர் கதிர்வீச்சைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தினார். ரேடியத்திலிருந்து கதிரியக்கமுள்ள ஆவி (Radiation Gas) வருகிறது என்பதை அங்குதான் கண்டுபிடித்தார். இந்த ஆவியை ரேடான் (Radon) என்று அழைக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி, சிக்கல் நிறைந்த யுரேனியம் -ரேடியம் இவற்றின் மரபு முறையை (Genelogy) அறிய வழி வகுத்தது. மாக்கில் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் வல்லுநரான பிரெடெரிக் W. சோடி என்பவர் இக்கண்டு பிடிப்புக்குப் பேருதவியாக இருந்தார்.
கதிர்வீச்சுகளைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ந்த ரூதர் பல அரிய உண்மைகளை வெளியிட்டார். கதிரியக்கமுள்ள எல்லாப் பொருள்களிலிருந்தும் (காட்டாக யுரேனியத்திலிருந்து ) வரும் பீட்டா கதிர்கள் மிகவும் விரைவாகச் செல்லும் எலக்ட்ரான்களே (Electron) என்று காண்பித்தார். இதுபோல் ஆல்பா கதிர் என்பது கதிரியக்கப் பொருளிலிருந்து வரும் ஒரு நியூட்ரானும் சேர்ந்த அணுக்கருவே என்று சொன்னார். அதாவது எலக்ட்ரான் நீக்கப்பட்ட அணுவே ஆல்பாக் கதிர்கள் என்று வெளியிட்டார். இதை மெய்ப்பிப்பதற்காக ரூதர் கீழ்க்கண்டது போன்ற ஒரு கருவியை அமைத்தார்.
ஆல்பா துகள்கள், ஹீலிய அணுக்கருக்கள் என்பதைக் காட்ட ரூதர் போர்டு பயன்படுத்திய கருவி.
1. மட்டக் குமிழி
2. மின்வாய்கள்
3. ரேடான் நிரம்பிய காற்றுப் புகாமல் மூடப்பட்ட குழாய்
கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு குழாயில் பாதரசத்தை நிரப்பி அதிலுள்ள காற்றை நீக்கினார். ஒரு மட்டக் குமிழி (Levelling Bulb)யின் உதவியால் பாதரச மட்டத்தைக் கீழே இறக்கினார். குழாயிலுள்ள மற்றொரு சிறிய குழாயில் ரேடான் ஆவி (Radon Gas)யைச் செலுத்தி அதன் அடிப்பாகத்தைக் காற்றுப் புகாமல் மூடினார். ரேடான் ஆவி கதிரியக்கச் சிதைவினால் ஆல்பாக் கதிர்களை வீசியது. சில நாட்கள் கழித்து பாதரச மட்டத்தை மேலே ஏற்றினார். கதிர் வீச்சினால் உண்டான ஒருவித ஆவி குழாயின் மேலேயுள்ள குறுகிய பகுதியில் சென்றது. இந்தக் குறுகிய பகுதியிலிருக்கும் மின் வாய்களில் (Electrodes) மின்சாரத்தைச் செலுத்தினார். அதிலிருந்து வரும் ஒளியை ஒரு நிறமாலை காட்டி (Spectroscope)யில் செலுத்தி ஆராய்ந்தார். குழாயிலிருந்து வந்த ஒளிக்கோடு ஹீலிய ஆவி உண்டாக்கும் ஒளிக் கோட்டை ஒத்திருந்தது. இவ்வாறு ஆல்பா துகள்களும். எலக்ட்ரான் நீக்கப்பட்ட ஹீலிய அணுக்களும் ஒன்றாக இருந்ததால், ஆல்பாக் கதிர்களை எலக்ட்ரான் நீங்கிய ஹீலிய அணுக்கள் என்று உறுதிப்படுத்தினார்.
பிறகு ரூதர் போர்டு கதிர் இயக்கத்தினுடைய அழிவுத் தன்மையின் (Radio-Active Decay) அடிப்படை விதிகளைக் கண்டுபிடித்தார். கதிர் இயக்கமுள்ள பொருள்களின் கதிர் இயக்கம் (Radio -activity) காலத்திற்கேற்ப எப்படிக் குறைகிறது என்பதை இவ்விதி விளக்குகிறது. ஆராய்ச்சிக்கு நாம் எடுத்துக் கொள்ளும் ரேடியத்தின் அளவைப் பற்றி இங்குக் கவலை இல்லை. ரேடியம் குறைவாக இருந்தாலும் சரி, அல்லது நிறைய இருந்தாலும் சரி, அதை 1,760 ஆண்டுகள் வைத்திருந்தால் அந்த ரேடியத்தில் பாதியும், கதிர் இயக்கத்தில் பாதியும் மறைந்துவிடும். எடுத்துக்காட்டாக, ஒரு கிராம் ரேடியத்தை எடுத்து ஓர் இடத்தில் வைப்போம். 1760 ஆண்டுகள் கழித்து இந்த ரேடியத்தை எடுத்து மீண்டும் நிறுத்துப் பார்த்தால் அதன் எடை அரை கிராம்தான் இருக்கும். அதனுடைய கதிரியக்கமும் பாதியாகக் குறைந்துவிடும். ரேடியத்தின் அரை வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்த இவர், இதுபோல் கதிர் இயக்கமுள்ள மற்ற பொருள்களின் அரை வாழ்வையும் கணித்தார்.
இவ்வாறு அரை வாழ்வுபற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது அவற்றின் கதிர் இயக்கத் தன்மை நில உலகத்தின் வயதையும், பாறைகளின் வயதையும் கணக்கிட உதவும் என்று கண்டார். இதன்படி நமது உலகத்தின் வயது 70 கோடி ஆண்டுகள் என்று கணக்கிட்டார். ஆனால் ரூதர் உலகத்தின் வயது 10 கோடி ஆண்டுகள் என்று அறிவு நூல் புலவர்கள் நம்பி இருந்தனர்.
மேலும், தனிம வெப்ப நிலை அளவு கோலை (Absolute Scale Of Temperature) கண்டுபிடித்த லார்டு கெல்லின் (Lord Kelvin) என்ற அறிஞர், இந்த உலகம் கதிரவனிடத்திலிருந்து அது இழுக்கும் வெப்பத்தைவிட மிகுதி வெப்பத்தை வெளிவிடுகிறது. இவ்வாறு சென்று கொண்டிருந்தால் இன்னும் சில கோடி ஆண்டுகளில் இந்த உலகம் உறைந்துவிடும் என்று சொல்லியிருந்தார். இக்கருத்தினை எல்லோரும் நம்பி இருந்தனர்.
ஆனால் ரூதரின் ஆராய்ச்சி இந்தக் கொள்கையைத் தகர்த்தெறிந்தது.
https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2020/feb/04/லார்டு-ரூதர்-போர்டு-அணுவைப்-பிளந்த-அறிஞர்---முகலியபெருமாள்-3348988.html

By DIN | Published on : 04th February 2020 11:44 AM |

ரூதர் தம் ஆராய்ச்சியில், இந்த உலகத்திலிருக்கும் கதிர்வீச்சுள்ள பாறைகள் பூமி இழுக்கும் வெப்பத்தை விட மிக அதிகமாக வெப்பத்தை வெளிவிடுகின்றன. எனவே, இந்த உலகம் இப்போதைக்கு உறையாது, வரையறுத்துக் கூற முடியாத இன்னும் பல நூறு கோடி ஆண்டுகள் வரை இந்நில உலகில் உயிர் வாழ்க்கை இருக்கும் என்று வெளியிட்டார்.
மாக்கில் பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு புதுக் கருத்தைக் கண்டுபிடித்தார் ரூதர். இன்று அந்தக் கொள்கை சாதாரணமாகயிருந்தாலும், அன்று ரூதர் வெளியிட்டபோது அது புரட்சிகரமான கருத்தாகத் தெரிந்தது. பொருள்களின் கதிர்வீச்சுக்குக் காரணம் அணுக்களின் சிதைவே என்றும், இந்தச் சிதைவு இயல்பாக நிகழ்கின்றது என்றும் கூறினார். பொருளின் மாறாத் தன்மையாகிய (Conservation of matter) இவ்விதி சர் வில்லியம் ராம்சே (Sir William Ramsay) என்ற இயற்பியல் வல்லுநரைத் திடுக்கிடச் செய்தது. ரூதர் போர்டு தன் கொள்கையை உறுதிப்படுத்தவே எல்லாரும் அக்கொள்கையை ஏற்றுக் கொண்டனர்.
மாக்கில் பல்கலைக்கழகத்திலிருந்த ரூதர், அதைவிட்டு 1907- இல் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அணுவைப்பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த ரூதர், மிக விரைவிலேயே அப் பல்கலைக்கழகத்தை உலகம் புகழும் அணு ஆராய்ச்சி நிலையமாக மாற்றினார்.
மான்செஸ்டர் வந்தவுடன் கதிர்வீச்சுகளை எளிய முறையில் அளக்கும் கருவி ஒன்றுக்கு வழி வகுத்தார். அவர் சொல்லிய முறைப்படி ஹான்சு கெய்கர் (Hans Geiger) என்ற ஜெர்மன் அறிவியலார் ஒரு கருவியை உருவாக்கினார். கெய்கர் அளப்பான், உலோகத்தினாலோ அல்லது கண்ணாடியினாலோ செய்யப்பட்ட ஒரு குழாய், இந்தக் குழாயில் இரண்டு மின் வாய்கள் இருக்கின்றன. இந்த இரண்டு மின்வாய்களிலும் மின் அழுத்தம் இருக்கும். குழாயின் உள்ளே ஒருவகை வாயு (BoLu) நிரப்பப்பட்டிருக்கும் கதிரியக்கப் பொருளில் இருந்து வரும் கதிர்கள் குழாயினுள் சென்று அங்குள்ள வாயுக்களின் மூலகங்களை அயனிகளாக மாற்றுகின்றன. இந்த அயனிகளின் வழியாக மின்சாரம் பாய்வதால் குழாயினுள்ளே மின்னோட்டம் ஏற்படுகிறது. இந்த மின்னோட்டம் சிறு ஒலியை உண்டாக்குகிறது அல்லது மின்னோட்ட த்தின் விரைவிற்கு ஏற்ப வெளிச்சத்தை உண்டாக்குகிறது. இவற்றில் இருந்து கதிர்வீச்சைத் தெரிந்து கொள்ளலாம்.
ரூதர் போர்டு இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஒரு கிராம் ரேடியத்தில் ஒரு நொடியில் உண்டாகும் சிதைவுகளை (dis-integration) நுட்பமாகக் கணக்கிட்டார். ரூதர் போர்டின் அடுத்த பெரிய கண்டுபிடிப்புக்கு வழிகாட்டியதும் இந்தக் கருவியே.
ரூதர் ஒருமுறை ஆல்பாக் கதிர்களை மெல்லிய தங்கத் தகட்டின்மீது செலுத்தி ஆராய்ந்து கொண்டிருந்தார். தகட்டின் மீது விழும் ஆல்பாக் கதிர்கள் தகட்டின் மூலம் நுழைந்து சென்று தகட்டிற்கு அடுத்த பக்கத்திலுள்ள கெய்கர் அளப்பானில் விழ வேண்டும். தங்கத் தகட்டின் வழியாக ஆல்பாக் கதிர்கள் சென்றபோது ஒரு துகள் மட்டும் திரும்பி வந்தது. தகட்டின் வழியாக நுழைந்து செல்வதற்குப் பதிலாக அந்தத் துகள் ஏதோ ஒரு கடினமான பொருளின் மீது மோதிக் கொண்டதுபோல் திரும்பி பாய்ந்தது. ஆல்பா பீட்டாக் கதிர்கள் திடப்பொருள் என்று சொல்லப்படுகின்ற பொருள்களின் உள்ளே நுழைந்து செல்லும் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு கண்ட முடிவுக்கு இது முரணாக இருந்தது. எதிர்பாராத இந்த நிகழ்ச்சியைக் கண்ட ரூதர் பெரும் வியப்படைந்தார். ஆல்பா, பீட்டாத் துகள்களின் பெரும் பாகம் நுழைந்து செல்லும்போது சில துகள்கள் மட்டும் திரும்பிப் பாய்ந்தது ஏன்?
ரூதரும், கெய்கரும் இந்த ஆராய்ச்சியைப் பலமுறை திருப்பிச் செய்தனர். எல்லா நேரங்களிலும் விடை ஒன்றாகவே இருந்தது. 1911- ஆம் ஆண்டில் ஒருநாள் மாலை ரூதர் போர்டு குழப்பம் நீங்கித் தெளிவு பெற்றார். தங்கத் தகட்டிலுள்ள அணுக்களின் பெரும்பாகம் திறந்த வெளியாக (open space) அதாவது வெற்றிடமாக இருக்கிறது. இந்த வெற்றிடத்தின் வழியாகச் செல்லும் நுண் கதிர்கள் தகட்டைத் தாண்டி அப்பால் சென்றுவிடுகின்றன. ஆனால், அணுவின் நடுவில் இருக்கும் மிக நுண்ணிய கெட்டியான (dense) பகுதியில் படுகிற கதிர் அதன் வழியாகச் செல்ல முடியாமல் திரும்பி விடுகிறது. இந்த நடுப் பகுதியில்தான் அணுவின் எல்லா எடையும்(mass) அடங்கியிருக்கிறது. கடினமான இந்தப் பகுதியைத்தான் அணுக்கரு (Nucleus) என்று கண்டார் ரூதர் போர்டு. இந்தக் கண்டுபிடிப்புக்காக 1911-இல் ரூதர் போர்டுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.
முதல் உலகப் போரின்போது போர்க் கருவிகள் சில செய்ய வேண்டியிருந்ததால் ரூதரும் அவருடைய மாணவர்களும் ஆய்வுக் கூடத்தை விட்டு நீங்க வேண்டியிருந்தது. போர் முடிந்து ஆய்வகம் திரும்பிய மூன்று மாதங்களுக்கெல்லாம் ரூதருக்கு அவரது ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றி ஒன்று கிடைத்தது. போருக்குப் போவதற்கு முன்னால் அவருடைய உதவியாளர் ஒருவர், மிக விரைவாகச் செல்லும் ஆல்பாக் கதிர்களினால் நீரக அணுக் கருக்களை (Hydrogen nucleus) உடைக்க முடியும் என்று கண்டிருந்தார். இந்த அடிப்படையிலேயே ரூதர் காலக அணுக்களை (Nitrogen atoms) ஆல்பாத் துகள்களினால் பிளந்தார். இவ்வாறு மிக விரைவாகச் செல்லும் ஆல்பாத் துகள்களினால் காலக அணுக்களைப் பிளக்க முடியும் என்று கண்ட ரூதர் காலக அணுக்கருவில் (Nitrogen nucleus) இருக்கும் ஒரு புரோட்டானை நீக்கிக் காலகத்தை ஐசடோப் தீயகமாக (Isotope of oxygen) மாற்றினார் (Transformed). இவ்வாறு ஒரு பொருளின் அணுக் கருவில் இருக்கும் புரோட்டானை (proton) நீக்கி ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்ற முடியும் என்பதை உலகிற்கு முதன் முதலில் வெளியிட்டவர் லார்டு ரூதர் போர்டு. இவ்வாறு இயற்பியலில் (physics) ஒரு புதிய துறையைத் திறந்துவைத்த அவர், செயற்கை முறையில் கதிர்வீச்சு உண்டாக்குதல், செயற்கையில் நெப்டூடினியம்(neptunium), புளூட்டோனியம் (plutonium) போன்ற தனிமங்கள்(elements) உண்டாக்குதல், அணுவைப் பிளத்தல் (nuclear fission) போன்ற பல புதிய துறைகளுக்கும் வித்திட்டார்.
இவ்வளவு அறிவும் ஆற்றலும் பெற்றிருந்த ரூதர் போர்டிடம் வியத்தகு பண்பு ஒன்று இருந்தது. ஒரு சில அறிவியலாரைப் போல விழித்திருந்த நேரமெல்லாம் தனது வாழ்நாளை ஆய்வுக் கூடத்திலேயே கழிக்கவில்லை. ஓய்வு நேரங்களில் வேறு பல பணிகளிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். சிறு குழந்தைகளிடமும், பெரியவர்களிடமும் எப்பொழுதும் விளையாட்டாகப் பேசி அவர்களை மகிழ்விப்பார். குழந்தைகளுக்கு ஏற்ற கதைகள் எழுதும் ஆற்றல் இவரிடம் இருந்தது. ஓய்வு நேரங்களில் வெளியில் உலாவச் செல்வார். நல்ல காற்றும், எழில் மிக்க இயற்கைக் காட்சியும் உடலையும், உள்ளத்தையும் அறிவையும் வளர்க்கும் என்று அவர் அடிக்கடி சொல்வார். அதனை அவர் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார். ரூதர் போர்டு இயல்பாகவே சிறிது உரக்கப் பேசுவார், இவருடைய குரலின் ஓசையைக் கேட்கும் மாணவர்கள் இவர் வகுப்பிற்கு வரும்முன்னரே தங்களுடைய நாவல்களை மறைத்து வைத்துவிட்டு நல்லவர்களாகி விடுவார்கள்.
1919-இல் ரூதர் போர்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி வந்து காவன்டிஷ் ஆய்வுக் கூடத்திற்குப் பேராசிரியர் ஆனார். அதன் பிறகு வேறு எங்கும் அவர் செல்லவில்லை. தனக்கு முதலில் வழிகாட்டிய காவன்டிஷ் ஆய்வுக் கூடத்திலேயே தமது இறுதிக் காலம் வரை பணியாற்றினார். அணுவுக்குள் இருக்கும் அணுக் கருவைக் கண்டு, அணுவைப் பிளப்பதற்கு வழி காட்டினார் ரூதர். அணுவைப் பிளந்து அதன் அளவற்ற ஆற்றலினால் மனித சமுதாயம் இன்று அடையும், நாளை அடையப்போகும் பயன் எழுதும் தரம் அன்று. இவ்வாறு அணுவைப் பிளந்து, அணு ஆற்றலை உலகிற்குத் தருவதற்கு வழிவகுந்த இவரை "அணு ஊழித் தந்தை' என்று அழைக்கின்றனர். அணுவைப் பிளந்த அறிஞராகிய லார்டு ரூதர் போர்டு 1931- ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 19-ஆம் நாள் அவரது 60-வது வயதில் இம் மண்ணுலகைவிட்டு மறைந்தார். அவர் காட்டிய வழியில் இன்று எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மனித சமுதாயத்தின் நலத்திற்கு அவை பயன்படுத்தப்படுகின்றன. அவர் காட்டிய வழியில் அமைத்த அணு உலைகளாகவும், அணு ஆற்றல் கருவிகளாகவும் இந்த உலகம் உள்ள வரை அவரும் இவ்வுலகத்தில் உலவிக் கொண்டிருப்பார் அல்லவா?

No comments:
Post a Comment