Thursday, 2 January 2020

மண், - பி ஏ வெ , மண் அரிமானமும் பாதுகாப்பும் - என். ச.


மண் (Soil): பூமியின் நிலப்பரப்பிலே, தாவரங்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் தாது, கரிமம் ஆகிய பொருள்களின் கலவை மண் எனப்படும். இது பாறை, தாவரம், விலங்கு ஆகியவை பிரிந்தழிவதாலும் (Decomposition) சிதைவதாலும் (Disintegra tion) உண்டாகும் விளைவுப்பொருளாகும். இவ் விதப் பிரிந்தழிமானமும் சிதைவும் பௌதிக, ரசாயன, உயிரியல் காரணங்களால் ஏற்படும் இயற்கைத் தேய் வினால் உண்டாகின்றன. இயற்கைத் தேய்வு நடக்கும் போது, பாறைத் துகள்களிடையே பலவகை உப்புக் களும், கார்பானிக அமிலமும், இன்னும் வேறு அமி லங்களும் கரைந்துள்ள நீரானது ஊறிக்கொண்டும் அந்தத் துகள்களைக் கரைத்துக் கொண்டும் செல்வ தால் அந்தப் பாறையானது ரசாயன அமைப்பிலும் தாதுவியல் (Minerological) அமைப்பிலும் மாறுத வடைகின்றன. 

பாறைப்பொருள்களிலிருந்து மண்கள் உண்டாகிக் கொண்டு வரும்போது, அம் மண்கள் தொடர்ச்சியாக மாறுதல்கள் அடைந்து கொண்டே வருகின்றன. இவ் விதமான மண் முதிர்ச்சி (Soil development) நிகழ் கின்றது என்பது மண்ணை மேற்பரப்பு முதல் அடியி லுள்ள பாறைவரையில் செங்குத்தாக வெட்டி, அந்த வெட்டு முகத்தைப் பார்த்தால் அதிலே மண்ணானது கிடைமட்டத்தில் நன்றாக வளர்ந்துள்ள பல அடுக்குக் களாக அமைந்திருப்பதிலிருந்தும் திட்டமாகக் காணப் படுகிறது. இந்த அடுக்குக்கள் கிரமமாகக் குழவிப்பரு வம், இளமை, முதிர்ச்சி, முதுமை என்னும் நான்கு நிலைகளாக வகுக்கப் பெறுகின் றன. மண் முதிர்ச்சி யானது தாய்ப் பொருளாகிய பாறையின் தன்மை, தட்பவெப்ப நிலை (Climate), அந்த இடத்தில் வள ரும் மரஞ்செடிகளின் இயல்பு (Vegetation), தல விவரம் (Topography), காலம் ஆகிய மண் உண்டா வதற்கான பல காரணிகளால் ஏற்படும் விளைவாகும். இப்படி வேறுபட்ட காரணிகள் ஒன்றோடொன்று வினைப்படுவதால், மண் முதிர்ச்சியினாலே பல மாதிரி யான மண்கள் (Soil types) உண்டாகின்றன. 

பாகுபாடு: இந்தப் பல மாதிரியான மண்களை வரிசைகள் (Orders), உள்வரிசைகள் (Sub-orders), பெரிய மண் கூட்டங்கள் (Soil groups), மண்தொடர் கள் (Catenas), தொடரடுக்குக்கள் (Series), மாதிரி கள் (Types) எனப்பாகுபடுத்த முயல்கின்றனர். வலய வரிசை (Zonal), வலயத்துள் வரிசை (Intrazonal), வலயமில்லா வரிசை (Azonal) என மூன்று வரிசை கள் வகுக்கப்பட்டிருக்கின் றன, வலய மண்ணிலே தட்ப வெப்பநிலை, தாவரங்கள் ஆகியவற்றின் விளைவைக் காட்டுகின்றன. தல விவரம், தாய்ப்பாறை ஆகியவற் றின் விளைவுகளை வலயத்துள் மண் பிரதிபலிக்கும். இவ் விரண்டுமல்லாத வலயமில்லா மண்ணிலே மேலே சொன்ன இருவகை மண்களிலும் காணப்படும் தன்மை கள் போன்ற திட்டமான தன்மைகள் காணப்படுவ தில்லை. ஒவ்வொரு வரிசையிலும் பல உள்வரிசைகள் உண்டு. உலக நெடுகிலும் உள்ள மண்களை 36 பெரு மண் கூட்டங்களாகப் பிரித்திருக்கின் றனர். அயன மண்டல மண்களைப்பற்றிச் சில சிறப்பான பிரச்சினை கள் எழுகின்றன, 

சரளை மண்ணும் செம்மண்ணும் வலய வரிசையிலே, அயனச்சரளை என்னும் உள்வரிசையிலே செம்பழுப்புச் சரளை, சரளை என்னும் பெருமண் கூட்டங்களில் சேரும் கரிசல் மண்ணை எந்தப் பிரிவில் வைப்பது என்பது இன்னும் தீர்மானமாகவில்லை. தென்னிந்திய மண் களைக் கரிசல் மண்கள், செம்மண்கள், மேற்குக்கரைச் சரளை மண்கள், கழிமுகத் தீவுகளின் (Deltas) வண் டல் மண், கடற்கரைப் பரப்புக்களின் மணல் மண், காட்டுமண் எனப் பிரிக்கின் றனர். உப்பு (Saline) மண்ணும், கார (Alkaline) மண்ணும் இங்கும் அங்கும் கட்டுக்களாகக் காணப்படுகின்றன. 

மண்களின் பௌதிக இயைபும் பண்புகளும் : மண் கள் தாது, கரிமம் ஆகிய பொருள்களின் கலவை. அதில் புரைகள் (Pores) இருக்கும். மண்ணின் கன அளவிலே பாதிக்குமேல் இந்த நுண்தொளை களின் கன அளவு இருக்கும். நுண் தொளைகளில் காற்றும் நீரும் புகுந்திருக்கும். இங்குள்ள காற்று, நீர் ஆகியவற்றின் அளவு வேறுபட்டுக்கொண்டிருக்கும். மண்ணிலுள்ள காற்று-நீர் விகிதத்தைப் பாதுகாப்பிட்டிருப்பது மிக முக்கியமானது. மண்ணினுள்ளே காற்று உலவுவதும் போதுமான ஈரம் இருப்பதும் பயிர்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. 

பௌதிக நோக்கிலே பார்க்க, மண்ணிலுள்ள தாதுப் பொருளானது மணல் (Sand), வண்ட ல் (Silt), களி மண் (Clay) என்னும் மூன்று வகைகளால் ஆகியிருக் கிறது. கப்பியும் (Gravel) பலவேறுபருமனுள்ள கற் களும் அதில் இருப்பதுண்டு. மணல் துகள்கள் கண்ணால் நன்றாகப் பிரித்துக் காணக்கூடிய அவ்வளவு பெரி யவை. வண்டல் துகள்கள் மிகச் சிறியவை. களிமண் துகள் இவையெல்லாவற்றிலும் மிக மிகச் சிறியது. அதன் அளவு 2 மைக்ரான் களுக்கும் சிறியது (510 

மில்லி மீட்டர்). களிமண் ஈரமாக இருக்கும்போது பிசு பிசுப்பாக ஒட்டிக்கொள்ளும். எளிதில் வடிவை மாற் றக்கூடிய இளக்கமாக (Plastic) இருக்கும். உலர்ந் தால் மிருதுவின்மையும் கடினமும் உள்ளதாக இருக்கும். இந்த வகைகள் கலந்திருக்கும் விகிதத்தைப் பொறுத்து மண்ணின் செறிவு (Texture) முரடென்றும் (Coarse), நடுத்தரமென்றும் (Medium), மென்மை (Fine) என்றும் சொல்லப்படும். மண்ணிலுள்ள பாகங்களிலெல்லாம் களிமண்ணே மிக அதிக மாக வினைப்படும் பாகமாகும். களிமண்ணானது மற்ற வகைகளோடும், மட்கு என்னும் சிதைவுற்ற கரிமப் பொருள்களோடும் சேர்ந்து சிறு துணிக்கைகளாகத் திரண்டு, மண்ணிலே சிறுசிறு மணிகள் போன்ற அமைப்பை உண்டாக்கும். இவ்விதத் திரட்சியமைப்பு மண்ணில் காற்று உலவுவதற்கும், நீர் எளிதாகச் செல் வதற்கும் முக்கியமான காரணமாகின்றது. 

மண்ணின் அமைப்பு இத்துணை முக்கியமானது என் பதைக் கருதி, மண்ணிலே இவ்விதத் திரட்சியமைப்பு நன்றாக உண்டாகும்படியாக க்ரில்லியம் (Kryllium) போன்ற கரிம ரசாயனப் பொருள்களை அண்மைக் காலங்களில் மண்ணிலே கலக்கின் றனர். 

மண்களின் ரசாயனப் பண்புகள் : ரசாயன நோக்கி னின்றும் கருதினால், மண்ணின் தாதுப்பொருள் 90 சத வீதம் சிலிக்கேட்டுக்களும் இரும்பு ஆக்சைடுகளும் கொண்டு அமைந்திருக்கிறது. மிகுந்துள்ள 10 சத வீதம் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சோடி யம் ஆகியவையும் மிகச் சிறிய அளவில் நைட்ரஜன், பாஸ்பரஸ், கந்தகம், போரான், மாங்கனீஸ், நாகம், செம்பு ஆகியவையும் மிக நுட்பமான அளவிலே வேறு பல தனிமங்களும் இருக்கின்றன. தாவரங்கள் தமக்கு வேண்டிய தாது உணவுப்பொருள்களை மண்ணிலிருந்து அதிலுள்ள நீரில் கரைந்துள்ள கரைசல் வடிவில் பெறு கின்றன. ஒரு காலத்தில் மண்ணிலுள்ள நீரில் கரைந்து வரும் தாதுப்பொருள்களின் அளவு மிகச் சிறியதே. மண்ணிலே தாதுக்களிடையும் கரிமப் பொருள்களிடையும் நடக்கும் ரசாயன மாறுதல்கள், இப்பொருள்கள் தாவர வளர்ச்சிக்கு எளிதாகக் கிடைக்கும்படி அனு கூலமாக இருக்கின் றன. 

மண்ணிலுள்ள கரிமப்பொருள்: பயிர் செய்யும் நிலத்தி லுள்ள மண்ணில் 1 முதல் 4 சதவீதம் கரிமப்பொருள் இருக்கிறது; புது மண்ணில் இதனினும் அதிக சத வீதம் கரிமப்பொருள் இருக்கலாம். இப்பொருள் தாவ ரங்களின் உடற்பொருள் முற்றிலும் அல்லது ஓரளவுக் குச் சிதைந்துவிடுவதால் உண்டாகிறது. இதனோடு பாக்ட்டீரியம் முதலிய நுண்ணுயிர்கள் அழிவதால் உண்டாகும் பொருளும் சேரும். மண்ணிலுள்ள கரி மப்பொருள் அம் மண்ணின் செழுமைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. தாவரத்துக்கு வேண்டிய நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பேட்டுக்கள் ஆகியவை முற் றிலுமே மண்ணிலுள்ள கரிமப்பொருள்களிலிருந்து கிடைப்பவை என்று சொல்லிவிடலாம். மேலும் இந்தக் கரிமப்பொருள் மண்ணின் பௌதிக நிலையையும் பாதிக் கும். இது மண்ணானது நீரைப் பிடித்து வைத்துக் கொள்ளும் ஆற்றலுக்கு உதவுகிறது. மண்ணரின் அமைப்பையும் இது மேம்படச் செய்கிறது. மேலும் மண்ணிலுள்ள கரிமப்பொருளே, அங்குள்ள நுண்ணுயிர்களுக்குச் சக்தியைக் கொடுக்கும் மூலமாகும். மண்ணில் கரிமப்பொருள் இல்லாவிட்டால், அங்கு நடக் கும் உயிர் ரசாயனச் (Biochemical செயல்கள் எல் லாம் நின்றுபோகும். 



மண்வாழ் உயிர்கள் (Soil organisms) : மண்ணில் வாழும் தாவரம், விலங்கு ஆகிய உயிர்கள் மண்ணில் சேரும் கரிமப்பொருளைத் தாக்கித் தமக்கு வேண்டிய சக்தியையும் தம் திசுக்களை அமைத்துக்கொள்வதற்கு வேண்டிய உடலைக் கட்டும் பொருள்களையும் அதனின் றும் பெறுகின்றன. இவ்வாறு கரிமப்பொருளானது மண்வாழ் உயிர்களுக்குச் சக்திவிளை (Energy produ cing) பொருளாகவும், உடல்கட்டுப் (Body building) பொருளாகவும் உதவுகிறது. மண்ணில் சேர்த்த கரி மப்பொருள்கள் மிக விரைவில் பிரிவுற்று மட்காக மாறுகின் றன. இந்த மட்கே சாதாரணமாக மண்ணின் மேற்பரப்பில் கறுப்பாக அல்லது பழுப்பாகக் காணும் பொருள். இது உயிர் ரசாயனச் சிதைவுச் செயல்க ளால் மிகச் சிக்கலான ஒரு தொகுப்புவினை எஞ்சு பொருளாகும் (Synthesised residue). 

மண்ணிலே தாவரங்களும் விலங்குகளும் ஆகிய இரு வகையுயிர்களிலும் பல்வேறு இனங்கள் வாழ்கின்றன. மைக்ராஸ்கோப்பினால் காணமுடியாத நுண்மையான பாக்ட்டீரியங்கள் முதல் மண்புழுக்களும், அவற்றி னும் பெரிய கொறிக்கும் விலங்குகளும் (Rodents) மண்ணில் வாழ்கின்றன. பாக்டீரியங்கள் மட்டும் ஒரு கிராம் எடை மண்ணில் சில இலட்சம் முதல் பல கோடி எண்ணிக்கையில் இருக்கும். மண்வாழ் உயிர் கள் மண் செழிப்பாவதற்கு மிக முக்கியமாக உதவு கின் றன. 

மண்ணின் செழுமை : நன்றாகப் பயன் தரும் தன்மை (Productivity) யுள்ள மண் போதுமான நீரைப் பிடித்துவைத்துக்கொள்ளும் தன்மையுள்ள தாக இருக்க வேண்டும். காற்று நன்றாகப் பரவியிருக்க வேண்டும். வேர்கள் கடினமான மண்ணாங் கட்டிகளால் தடைப் படாமல் எளிதாகப் புகுந்து இறங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதில் போதுமான கரிமப்பொருள் இருந்து, அப்பொருளின் சிதைவினாலே போதுமான நைட்ரஜன் தாவர வளர்ச்சிக்குக் கிடைக்கவேண்டும். அதே சம யத்தில் அன்றாடப் பயிர் வளர்ச்சிக்கு வேண்டிய வேறு தாதுப்பொருள்களும் வளர்ச்சிக்கு வேண்டிய விரைவில் கிடைக்க வேண்டும். மேலும் பொட்டாசியம், பாஸ் வரம், கால்சியம், மக்னீசியம் முதலிய பயிருக்கு வேண் டிய தாது உணவுப் பொருள்களும் இருக்கவேண்டும். மண்ணில் நடக்கும் வினைகள் பயிர்களின் வளர்ச்சிக்கும், மண்ணில் வாழும் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கும் தக்கனவாக இருக்கவேண்டும். 

களிமண்ணும் மட்குமே மண்ணில் நடக்கும் வினை களுக்கெல்லாம் களமாக இருப்பவை. இவற்றைச் சாதாரணமாகக் களி-மட்குச் சிக்கல் (Clay humus complex) என்று சொல்வதுண்டு. மண்ணில் நிகழும் பௌதிக, ரசாயன உயிரியல் வினைகளில் மிகப் பெரும் பாலானவை இந்த களி - மட்கு கொலாய்டல் பொருள் மண்டலத்திலே (Regime) நடக்கின்றன. வேரானது மண்ணிலுள்ள புரையிடங்களில் புகுந்து உட்செல்லும் போது, வேர்த்துய்களுக்கும் (Root hairs) களி-மட் குச் சிக்கலுக்கும் மிக நெருக்கமாகவும் உள்ளுக்குள் ளானதாகவும் ஆகின்றது. இதனால் தாவரமும் மேற் சொன்ன கொலாய்டல் மண்டலத்தில் (Colloidal system) ஒரு பாகமாகிவிடுகின்றது. 

மண்ணிலே நிகழ்கின்ற திகைப்பைத் தரும் மாறுதல் களாலும், என்சைம் செயல்களால் உண்டாகும் சிக்க லான சம்பந்தங்களாலும், மண்ணுக்கும் தாவரத்துக் கும் இடையே மண்ணின் நிலைக்கும் இயைபையும் செழுமையையும் தெளிவாக ஐயமின்றி உணர்ந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பயிர் 

செய்வதில் ஏற்படும் செயல்முறைப் பிரச்சினைகளில் தக்க தீர்மானங்களைச் செய்து கொள்வது கூடும். எனி னும், தாவரத்தின் வளர்ச்சிக்கு மண்ணானது எவ்விதத் தில் ஊடகமாக இருக்கின்றது என்பதைப் பற்றிய அறிவு இன்னும் தொடக்க நிலையிலேயே இருக்கின் 

பி. ஏ. வெ. 

*******************************

ரசாயன அமைப்பு : பூமியின் மேற் பரப்பில் கரிமப் பொருள்களும், தாதுக்களும் ஒன்றுபடாத வகையில் அடுக்கடுக்காய் அமைந்துள்ளன. இவ்வடுக்குக்களை நாம் மண் என அழைக்கிறோம். மண் என்பது மிகச் சிக்கலானதொரு இயற்கை அமைப்பு. பூமியின் பரப் பில் தாவரங்களின் வளர்ச்சியனைத்தும் மண்ணில் தான் நிகழ்கிறது. 

மண்ணின் ரசாயன அமைப்பு இடத்திற்கு இடம் மாறுபடும். தாவர வளர்ச்சிக்குத் தேவையான உலோ கங்கள் அனைத்தும் பெரும்பாலும் மண்ணில் இருக்கும். இயற்கை வளமுள்ள மண்ணில் சோடியம், பொட்டாசி யம், கால்சியம், மக்னீசியம், இரும்பு போன்ற உலோ கங்களும் பாஸ்வரம், குளோரின், சிலிக்கன் முதலிய மற்றத் தனிமங்களும் மண்ணில் காணப்படும். தாவரப் பொருள்களின் சிதைவால் தோன்றும் மட்கிலிருந்து நைட்ரஜனைக்கொண்ட கரிமப் பொருள்கள் பலவற்றை மண் பெறுகிறது. 

மண்ணிலுள்ள நீர் எதிரான மின்னேற்றம் கொண்ட அயானாகப் பிரிந்திருப்பதாகக் கொள்ளலாம் ஆகை யால் எதிர் மின்னேற்றம் கொண்ட நேரயான்களும், நேர்மின்னேற்றம் கொண்ட எதிரயான் களும் மண் ணில் இருக்கும். மண்ணில் குழம்பு நிலையிலுள்ள துகள் கள் எதிர்மின்னேற்றம் கொண்டவை. ஆகையால் அவை எதிரயான்களைக் கவர்ந்து கொள்கின்றன. இத னால் மண் அமிலத் தன்மை கொண்டதாகிறது. மண் ணின் அமிலத் தன்மையை அதன் pH என்ற அளவால் குறிப்பது வழக்கம். ஒரு மண்ணின் pH அளவு 7க்கும் குறைவானால் அது அமிலத் தன்மையுள்ளதாகக் கூறப் படும். எப்போதும் பயிரிடப்படாத இயற்கை மண் ணின் pH 4 பிலிருந்து 8.3 வரை இருக்கலாம். சில வரண்ட நிலங்கள் மிகவும் காரமுள்ளவைகளாக இருக்க லாம். சோடியம், பெட்ாடாசியம் என்ற உலோகங் களின் கார்பனேட்டுக்கள் மண்ணில் அதிகமாக இருப் பது அவற்றிற்குக் காரத் தன்மையை அளிக்கிறது. ஒரு மண்ணுக்கேற்ற தாவர வகைகளை அதன் ரசாயனத் தன்மையே பெரிதும் நிருணயிக்கிறது. ஆகையால் மண்ணியற் பாகுபாடுகளில் அதன் pHஐ அறிவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

மண் அரிமானமும் பாதுகாப்பும் (Soil ero sion and conservation): காற்று நீர் போன் றன வற்றால் மண் அரிக்கப்பட்டு வேறிடத்திற்கு அடித்துச் செல்வதை மண் அரிமானம் என்பர். இது இயற்கை யாக நடைபெறும் அளவில் இருந்தால் கேடு விளையாது. ஆனால் மனிதன் அரிமானத்திற்குத் தடையாக இருக் கும் புல் முதலியவற்றை நீக்கி விவசாயம் செய்வதால், இயற்கையாக நிகழ்வதிலும் ஆயிரம் மடங்கு விரைவாக அரிமானம் ஏற்படுகிறது. 

காற்று விரைவாக அடிப்பதால் மண் அரிமானம் ஏற் படுகிறது. அதைப்போலவே நீரோட்டத்தாலும் அரி மானம் ஏற்படும். காற்றும் நீரும் சேர்ந்து, கடலில் அலைகள் ஏற்படுவதானாலும் கடலோரத்தில் அரிமானம் நிகழ்கிறது. 1 

மழைநீரின் ஒரு பகுதி பூமியில் உறிஞ்சப்படுகிறது. பெரும்பகுதி நீர் வழிந்தோடுகிறது. மழை பெய்யும் 

போது மண்ணின் மேற்பகுதி பெயர்ந்து விடும். தரை யின் சரிவைப் பொறுத்துப் பெயர்ந்த மண் ஓடும் நீரினால் அடித்துச் செல்லப்படுகிறது, மண்வகை, தரை யின் சரிவு, மழையின் கடுமை முதலிய பல அமிசங் களைப் பொறுத்து அரிமானத்தின் அளவிருக்கும். தவறான முறையில் செய்த விவசாயம், அளவுக்கு மீறிய மேய்ச்சல், புல் வெளி தீப்பற்றி எரிந்துபோதல் முத லான பல காரணங்களால் அரிமானம் மிகுதியாகிறது. 

நீரினால் ஏற்படும் மண் அரிமானம் மூவகைப்படும். நீர் ஓடும்போது மண்ணை மெல்லிய படலமாக அரிக்கும். இது படல அரிமானம் (Sheet erosion) எனப்படும். பயிராகும் நிலங்களில் இவ்வகை அரிமானம் மிகுதி. ஆனால் படல அரிமானம் நடைபெறுவதை விவசாயிகள் எளிதில் கவனித்தறிய முடிவதில்லை. நாளடைவில் அடிமண் (Sub soil) தெரிந்த பிறகே அரிமானம் நடந் ததை உணர்வர். 

சில சமயம் நீரோடுவதால் பூமியை அறுத்துச் சிறிய சிறிய பள்ளங்களை உண்டாக்கும். இவ்வகை அரிமானம் சிற்றறுத்தோடி அரிமானம் (Rill erosion) எனப் படும். படல அரிமானத்தைவிட இந்த அரிமானத்தை எளிதில் கண்டுகொள்ளலாம். ஆனால் இதை நிலத்தை உழுது சரி செய்துகொள்கின் றனர். படல அரி மானத்தைவிடச் சிற்றறுத்தோடி அரிமானம் கேடு விளைவிக்கும், 

சரிவு மிகுதியான நிலப்பகுதியில் ஏராளமான மழை நீர் மிக வேகமாத ஓடுவதால் ஆழமான பெரிய பள்ளங் கள் தோன்றலாம். இது பேரறுத்தோடி அரிமானம் (Gulley erosion) எனப்படும். இந்த அரிமானம் சிற்றறுத்தோடி அரிமானத்தைவிட மிகக் கொடியது. இந்த அரிமானத்தால் பெருங்கேடு விளையும். எனவே இதைத் தடுக்கவேண்டும். படல அரிமானத்தைத் தடை செய்வதன் மூலமே மற்றவகை அரிமானங்கள் ஏற் படாமல் பார்த்துக்கொள்ள முடியும். 

காற்றினால் ஏற்படும் அரிமானமும் நீரினால் ஏற்படும் அரிமானத்தைப் போலவே கொடுமையானது. மண்ணா னது பொடியாகிப் புழுதியாவதைத் தடுக்க உறை போலமையும் புல்போன்ற தாவரம் இல்லாததாலும், வெயில் கடுமையால் மண் உலர்வதாலும், காற்றைத் தடைசெய்து வேகத்தைக் குறைக்க மரம் முதலியன இல்லாத திறந்தவெளிகளாக இருப்பதாலும் காற் றரிமானம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, இலே சான தாகவுள்ள மண்ணின் செழிப்பான பகுதியைக் காற்று ஓரிடத்திலிருந்து அகற்றி, அடித்துச்சென்று வெகுதொலைவிலுள்ள இடத்தில் சேர்த்துவிடுகிறது. காற்றரிமானத்தின் காரணமாக வாயு மண்டலத்தில் மணல், புழுதி, தூசு முதலியன நிறைந்து, மக்களுக்கும் விலங்குகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படும். ஓரிடத் தில் உள்ள பயிர்களைப் பறித்து, மற்றோரிடத்தில் உள்ள பயிரை மணலால் மூடும். 

அலை அரிமானத்தின் (Wave erosion) காரண மாகக் கடற்கரையும், ஏரி கரை, ஆற்றங்கரை முதலியனவும் சிறிது சிறிதாகச் சிதைகின் றன. 

மண் அரிமானத்தின் அளவையும் அதனால் ஏற்படும் கேடுகளையும் பற்றிய புள்ளிவிவரங்கள் உலக முழுமைக் கும் சரியாகக் கிடைக்கவில்லை. 2,500,000 டன் நிறை யுள்ள பாஸ்பேட்டு மண் அரிமானத்தின் காரணமாக ஆண்டுதோறும் அமெரிக்காவில் இழக்கப்படுவதாகக் கணக்கிட்டுள்ளனர். 282 மில்லியன் ஏக்கர் நிலம் அரி மானத்தின் காரணமாக அந்நாட்டில் செழுமை யிழக் கின்றனவாம். மேலும் 775 மில்லியன் ஏக்கர் நிலத்தில் உள்ள செழிப்பான மேல் மண் வெவ்வேறு அளவில் 

அகற்றப்பட்டுவிட்டனவாம். 100 மில்லியன் ஏக்கர் நிலம் அரிமானத்தின் காரணமாகப் பாழடைந்துவிட்ட தாகவும் புள்ளி விவரம் காட்டுகிறது. மண் அரிமானத் தைக் கட்டுப்படுத்த விரிவான திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற அரும்பாடுபடும் அமெரிக்க நாட்டிலேயே மண் அரிமானத்தால் இவ்வளவு கேடு எனில், மற்ற நாடுகளில் அதனால் விளையும் கேடு பல மடங்காக இருக்கும். 

மண் அரிமானத்தின் காரணமாக நிலத்தின் செழுமை குன்றும். நீர் வீணாகும் ; பயிர் நிலம் பாழாகும் ; மகசூல் குறையும்; நீரோடை, ஏரி, நீர்த்தேக்கம் முதலிய வற்றில் வண்டல் படிந்து, அது பிடிக்கும் நீரின் அளவு குன்றிவிடும் வெள்ளம் பஞ்சம் முதலியன ஏற்படும். 

ஆகவே இவ்வளவு கேடு விளைக்கும் மண் அரிமானத் தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. மட்டவரப்பு (Contour bunding) அமைப்பதன் மூல மும், அடுக்கு நிலச்சாகுபடி (Terrace cultivation) மூலமும், மட்டக்கிடங்கு (Contour trenching), மட்ட உழவு (Contour ploughing) செய்வதனாலும் அரிமானத்தைக் கட்டுப் படுத்தலாம். புல் வளர்த்தும் அரிமானத்தைக் கட்டுப்படுத்தலாம். சரிவான நிலப் பகுதியில் 200-300 அடி இடைவெளி பயிரிடவிட்டு விட்டு 5-10 அடி அகலத்திற்குப் புல் வளர்ப்பதன் 

மூலம் மண் அரிமானத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆற்றின் கரைகளில் நாணல் போன்ற புல்வகையைப் பயிரிடுவதும் மண் அரிமானத்தைத் தடை செய்யவே யாகும். 

மண் அரிமானத்தை எதிர்க்கும் ஆற்றலை மிகுதியாக் கும் அளவு நிலத்திற்குச் செழுமையூட்டும் ரசாயன உரங்களையிடுவதும் மண் அரிமானத்தைக் கட்டுப் படுத்த வழங்கும் ஒரு முறையாகும். 

மேற்கூறிய பல முறைகளுள் எந்தெந்த முறை எம் தெந்த நிலப்பகுதிக்கு ஏற்றதோ அந்தந்த முறை களைப் பின்பற்றி மண் அரிமானத்தைக் கட்டுப்படுத்து வது நாட்டின் விவசாய வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். 

என். ச.

No comments:

Post a Comment