பாண்டியன் சுந்தரம் is with Vinoth Pandian and Mani Kandan.
குழந்தை லூயிஸின் கண்களைப் பதம் பார்த்தது குத்தூசி..விளைவு? பார்வை இழந்தவர்கள் பயன்பெற, விரல்களைக் கண்களாக்கி உணரும்
பிரெய்லி முறை உருவானது...
நீங்கள் உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஓர் இரவுப் பொழுதில், தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம், மின்சாரம் இல்லாமல் போனால், திடீரென உங்கள் சூழல் இருண்டு போனால், ஒரு வினாடியேனும் பதறுவீர்கள் அல்லவா? ஆனால், எந்நேரமும் இருளையேக் கண்டு கொண்டிருப்போர் பற்றி என்றேனும் நினைத்திருக்கிறீர்களா?
கண்களால் எந்தக் காட்சியும் காணமுடியாத இருட்டு உலகம் அவர்களுடையது. அவர்களால் எதையும் பார்க்க இயலாது. எதையும் கற்றுக் கொள்ள முடியாது. எழுத்துகள் என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது.பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் வாழ்ந்தனர் அவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அந்தச் சிறுவனால் அந்நிலை மாறியது. விழியில் பார்வை இழந்தவர்களுக்கு விரல்களையே கண்களாக மாற்றினான் அவன். அவன் பெயர் லூயிஸ் பிரெய்லி!
பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரிலிருந்து 20 மைல்கள் கிழக்கே அமைந்துள்ள கூவ்ரே என்னும் கிராமத்தில் வசித்த சைமன் ரீன் - மோனிக் பிரெய்ல் இணையருக்கு ஜனவரி நான்காம் தேதி 1809 அன்று நான்காவது மகனாகப் பிறந்தான் லூயிஸ் பிரெய்லி.
சைமன் ரீன் தனக்குச் சொந்தமான 3 ஹெக்டேர் நிலத்தில் திராட்சைத் தோட்டம் வைத்திருந்தார். தோல் பொருட்கள் கொண்டு குதிரைச் சேணம் செய்யும் தொழிலையும் வெற்றிகரமாகச் செய்து கொண்டிருந்தார்.
தந்தையின் தோல் தொழில்கூடத்தில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் லூயிஸ். தன் அப்பா போல மூன்று வயதில், ஒரு விலங்குத் தோலில் துளையிடுவதற்காக, குத்தூசி கொண்டு முயன்று கொண்டிருந்தபோது அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. தோலின் பின்னால், குத்தூசியை வைத்து, தன் முழுபலத்தையும் தோலில் வைத்து அழுத்த, குத்திய குத்தூசி தோலுக்கு மிக அருகில் இருந்த குழந்தை லூயிஸின் ஒரு கண்ணைப் பதம் பார்த்தது... உள்ளூர் மருத்துவர் முதலுதவி செய்து, பாரீஸுக்குக் கொண்டுச் செல்லும்படிக் கூற, பாரீஸ் மருத்துவர்களோ அடிபட்ட விழிக்குச் சரியான மருத்துவம் இல்லையெனக் கைவிரித்தனர். ஒரு விழிப் பார்வையிழந்து, பல வாரங்கள் வலியில் துடித்துக் கொண்டு இருந்த லூயிஸின் நிலைமை மேலும் சிக்கலானது...ஒரு கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு மறுகண்ணுக்கும் பரவ, அடுத்த கண்ணும் பார்வை மங்கத் துவங்கியது. முதலில், பார்வை இழந்ததையே உணராத லூயிஸ், பெற்றோரிடம் "ஏன் எப்போதும் இருட்டாகவே உள்ளது?" எனக் கேட்டிருக்கிறான்.
தனது ஐந்தாவது வயதில் முழுப்பார்வை இழந்திருந்த லூயிஸுக்குப் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரின் ஊக்கம் நிறையக் கிடைக்கப்பெற, தன் குறைபாடே மறந்துபோகும் வண்ணம் தன்னம்பிக்கையையும், மற்றச் சிறார்கள் போல் வாழத்தலைப்படுதலையும் மேற்கொண்டான் லூயிஸ். அவனை அழைத்துக்கொண்டு தனது கிராமத்தையேச் சுற்றுவார் சைமன். பார்வையற்ற லூயிஸ், மற்ற உணர்வுகள், காலடி எண்ணிக்கை, சூழலின் ஒலிகள் கொண்டே அந்த ஊரின் அனைத்துப் பகுதிகளையும் தன் மனதில் வரைபடமாய் பதித்து வைத்திருந்தான். தனது 10-ஆவது வயது வரை கூவ்ரேயில் படித்திருந்த லூயிஸ், தன் கல்வியைத் தொடர பாரீஸுக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.
லூயிஸின் அறிவாற்றலும், தன்னம்பிக்கையும் அவனுக்குத் தேசிய பார்வையற்றோர் பள்ளியில் இடம்பெற்றுத் தந்தது. வேலண்டின் ஹாய் என்பவர் அவராகவே உருவாக்கி இருந்த எழுத்துமுறை கொண்டு அங்கு பார்வையற்றோர்க்கு கல்வி சொல்லித் தந்து கொண்டிருந்தார். ஈரமான காகிதத்தில் செப்புக் கம்பிகளால் ஆன லத்தீன் மொழி எழுத்துக்களின் அச்சு அழுத்தப்பட்டு, சற்று மேலெழும்பிய பகுதியைக் கையினால் தடவி, மாணவர் படிக்கும் முறை அது. கற்றுக்கொள்ள மிகக் கடினமாகவும் வேகம் குறைந்ததுமாக அந்த எழுத்து முறை அமைந்திருந்தது. முதலில், இம்முறைக்குப் பழக லூயிஸுக்கும் கடினமாகவே இருந்தது. ஒருவாறு கையினால் தடவிச் சரியாக எழுத்தினை லூயிஸ் உணர்ந்து சொல்ல, அதனை ஆசிரியர் வேலண்டின் ஹாய் பாராட்டுவார். ஆனால், மாணவர்கள் திருப்பி எழுதுவதற்கு இம்முறையில் வழியின்றி இருந்தது. மேலும், பாடங்கள் வெகு எளிதானதாகவும், ஆழமற்றும் இருந்தது, அறிவாற்றல் மிகுந்த லூயிஸ் பிரெய்லுக்கு இப்பாடமுறை மகிழ்வானதாக அமையவில்லை. ஆயினும், வேலண்டின் ஹாயின் முறையிலும் சிறந்த மாணவனாகத் திகழ்ந்தான் சிறுவன் லூயிஸ்.
1821 ஆம் ஆண்டு, கேப்டன் சார்லஸ் பார்பியர் என்பவர் இரவிலும், இருளிலும் எதிரி அறியா வண்ணம் செய்திகளை வீரர்கள் அறிய தடித்தக் காகிதத்தில் துளையிட்டு எழுதும் சமிக்ஞை மொழியை உருவாக்கியிருந்தார். அவர் லூயிஸ் படித்த பள்ளிக்கு வருகைதந்த போது அவரிடம் அந்த எழுத்துமுறை பற்றி அறிந்து கொண்டான் லூயிஸ்.
லூயிஸ் அப்பள்ளியில் சேர்ந்து, பல ஆண்டுகள் கடந்த நிலையில், அப்பள்ளிக்கு ஒரு சிறப்பு விருந்தினர் வருகை தந்தார். அவர் ஒரு இராணுவ வீரர். பல போர்க்களங்களில் முன்னணியில் நின்று போராடிய தீரர். அந்த இராணுவ வீரர், மாணவர்களிடைய உற்சாகமூட்டும் வகையில் பேசினார். சிறுவன் லூயிஸ் மெதுவாக அந்த இராணுவ வீரர் அருகில் சென்றான்.
"உங்கள் பெயர் என்ன?"என்று கேட்டான்.
"சார்லஸ் பார்ப்பியா"என்று பதில் கூறிய இராணுவ வீரர், குனிந்து, லூயிஸின் தலைமுடியைக் கோதியவாரே கேட்டார். "தம்பி, உன் பெயர் என்ன?"
"லூயிஸ்" என்று சொல்லிய சிறுவன் லூயிஸ் அடுத்துக் கேட்டக் கேள்வியில், அவ்வீரர் கலங்கித்தான் போய்விட்டார். "உங்களைத்தொட்டுப் பார்க்கலாமா?"
அடுத்த நொடி, சிறுவனின் கரங்களைப் பற்றித் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டார்.லூயிஸ், சிறிது நேரம் சார்லஸின் கன்னத்தை வருடியபடியே மெய்மறந்து நின்றான். பிறகு கேட்டான்.
"நீங்கள் நிஜமாகவே சண்டைக்கெல்லாம் போயிருக்கீங்களா?"
"என்னுடைய வேலையே அதுதானப்பா" என்றவர் கேட்டார், "உனக்கு சண்டை என்றால் ரொம்பப் பிடிக்குமா?"
"ஓ, பிடிக்குமே. நீங்க சண்டை போட்ட கதையை எல்லாம், எனக்குச் சொல்லுங்களேன்"
இராணுவ வீரருக்குக் கண்கள் கலங்கிக் குளமாகிவிட்டது. என்ன குற்றம் செய்தான் இச்சிறுவன்? ஏன் இவனுடைய பார்வை பறிபோய்விட்டது? ஒருவாறு, தன்னைத் தேற்றிக் கொண்டு, கதை சொல்லத் தொடங்கினார். மாணவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
லூயிஸ் குறுக்கிட்டுக் கேள்வி கேட்டான். "நீங்க இரவிலும் சண்டை போடுவீர்களா?"
"ஆமாம். நாங்கள் இரவிலும் சண்டை போடுவோம். இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல், இரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக, நாங்கள் ஒரு புதுமையான இரகசிய எழுத்து முறையே வைத்திருக்கிறோம் தெரியுமா?"
லூயிஸ் நிமிர்ந்து உட்கார்ந்தான். தன் காதுகளைத் தீட்டிக் கொண்டான்.
சார்லஸ் ஒரு காகிதத்தைத் தன் சட்டைப் பையில் இருந்து எடுத்தார்.
"இந்தத் தாளில் மொத்தம் பன்னிரண்டுச் சின்னச் சின்னப் பொட்டுக்கள், அதாவது புள்ளிகள் இருக்கிறது. இந்தப் பன்னிரெண்டு புள்ளிகளையும், விதவிதமாக மாற்றி மாற்றி அமைத்தால், வெவ்வேறு எழுத்துக்கள் வரும். துளி கூட வெளிச்சம் இல்லாத, இரவில் கூட, நாங்கள் இந்தப் புள்ளிகளைத் தொட்டுப் பார்த்துத் தகவல்களைச் சுலபமாகப் படித்து விடுவோம்."
சிறுவன் லூயிஸின் உள்ளத்தில் ஓர் எரிமலை வெடித்துச் சிதறியது. இதுவரை அறிந்திராத ஓர் வர்ண ஜாலம், வான வேடிக்கை, திடீரென்று மனதில், ஓராயிரம் மின்னல்கள், ஒரே நேரத்தில் தோன்றியதைப் போன்ற ஒரு வெளிச்சம்.
இனி தான் பயணிக்க வேண்டிய பாதை, தனது இலக்கு, அச்சிறுவனின் மனக் கண்ணில் தெரிந்தது. புறக் கண் போனால் என்ன, லூயிஸின் அகக் கண் திறந்தது.
சிறுவயது நினைவலைகள், அலை அலையாய் உள்ளத்தில் ஆர்ப்பரித்து எழுந்தன. சிறு வயதில், தனது தந்தையார், எழுத்துக்களை, தனக்கு அறிமுகம் செய்து வைத்த விதம் நினைவிற்கு வந்தது.
லூயிஸின் அப்பா, ஒரு மரப்பலகை, நிறைய ஆணிகளை எடுத்துக் கொள்வார். மரப் பலகையில் ஆணிகளை எழுத்து வடிவில் வரிசையாக அடிப்பார். லூயிஸின் விரல்களைப் பற்றி, ஆணிகளை ஒவ்வொன்றாக வருடச் சொல்வார். லூயிஸ் அந்த எழுத்துக்களை ஒவ்வொன்றாகத் தடவிப் பார்ப்பான். லூயிஸ் ஒவ்வொரு எழுத்தாகத் தடவத் தடவ, அந்த எழுத்தின் பெயரினை அவனது தந்தை கூறுவார்.
"லூயிஸ், இந்த எழுத்து உனக்குப் புரியுதாப்பா?"
"புரிகிறது அப்பா. நான் உங்கள் கையில் இந்த எழுத்தை எழுதிக் காட்டவா?" மகிழ்ச்சியுடன் தந்தை கை நீட்டுவார். ஆணியில் வருடிப் பார்த்த அதே எழுத்தை, அதே வடிவத்தை, அப்படியே, தந்தையின் கையில் எழுதிக் காட்டுவான். எழுதி முடித்ததும், தந்தை தன் மகனை அப்படியே வாரி அணைத்துக் கொள்வார். இப்படித்தான், லூயிஸ், பிரஞ்சு எழுத்துக்கள் ஒவ்வொன்றையும், ஆணிகளின் துணையோடு, தனது தந்தையிடம் கற்றுக் கொண்டான்.
எழுத்துக்களை மட்டுமன்றி, தன்னைச் சுற்றிலும் கேட்கிற ஒலிகளை, வாசனைகளை, மாறுகின்ற பருவ காலங்களை, இயற்கை, செயற்கைப் பொருள்களை எல்லாம் தொட்டுப் பார்த்து, கேட்டு, முகர்ந்து பார்த்து உணர்ந்து கொண்டான். மெல்ல மெல்ல பார்வைத் தேவைப்படாமலேயே, உலகத்தைப் புரிந்து கொண்டான்.
இராணுவ வீரர் சார்லஸ், பள்ளிக்கு வந்து சென்ற நாள் முதல், லூயிஸ் ஆழ்ந்த சிந்தனையில் அழ்ந்தான். இருபத்து நான்கு மணி நேரமும் சிந்தனை, சிந்தனை, சிந்தனைதான். வெறும் பன்னிரெண்டு புள்ளிகளைப் பலவிதமாக மாற்றி, மாற்றி, எல்லா எழுத்துக்களையும் உருவாக்கிட முடியும் என்பது லூயிஸுக்குப் பெரிய அதிசயமாக இருந்தது.
இதுமட்டுமல்ல, இந்தப் புள்ளிகளை இன்னும் கொஞ்சம் எளிமையாக்கி, சிற்சில மாற்றங்கள் செய்தால், இராணுவ வீரர்கள் மட்டுமன்றி, எல்லோரும் இதைப் பயன்படுத்தலாம் என்று எண்ணினான். தன் போன்ற பார்வை இழந்த, ஏராளமான மாணவர்களுக்கு, இம்முறை மிகுந்த பலன் கொடுக்கும் என நம்பினான்.
அன்றிலிருந்து, இதுவே லூயிஸின் முழுநேர அலுவல் ஆகிப் போனது. புள்ளிகளை பலவிதமாக மாற்றி, மாற்றி அமைத்து, பரிசோதனை செய்து, இரவு பகலாகப் பாடுபட்டு, பார்வை இழந்தவர்கள் எளிமையாகப் பயன்படுத்தக் கூடிய, படிக்கக் கூடிய, எழுதக் கூடிய, ஒரு புதிய மொழியை உருவாக்கினான் லூயிஸ்.
இராணுவத்தினர் பயன்படுத்தும் பன்னிரெண்டு புள்ளிகளுக்குப் பதில், ஆறே ஆறு புள்ளிகளை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, இந்த மொழியில், பள்ளிப் பாடங்கள், சூத்திரங்கள், அறிவியல் கோட்பாடுகள், கணக்குகள், இசைக் குறிப்புகள், கதைகள், கட்டுரைகள், நாவல்கள், ஏன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூட எழுதலாம், படிக்கலாம். அதுவும் விரைவாக....
1829 ஆம் ஆண்டில் ஆறு புள்ளிகள் கொண்ட பிரெய்லி முறையின் முதல் புத்தகத்தை வெளியிட்டான் லூயிஸ். தனது பட்டப்படிப்பு முடிவடைய அங்கேயே ஆசிரியராகத் தொடர்ந்தான் லூயிஸ். வெறும் எழுத்துமுறையோடு நிற்காமல், இசையிலும் தனது புலமையை வெளிபடுத்தினான். ஆர்கன், செல்லோ போன்ற கருவிகளை வாசிப்பதும்,
இசையமைப்பதுமாக அவனது வாழ்வினைக் கழித்து வந்தான்.
லூயிஸ் தனது நண்பன் பியரியுடன் இணைந்து பிரெயிலி முறை தட்டச்சு எந்திரத்தையும் தயாரித்தான்.
1839 ஆம் ஆண்டு, சிறுகோடுகள் தன்னை நீக்கி, வெறும் ஆறு புள்ளிகள் கொண்டு - இன்றும் எல்லோராலும் எழுதப்படும் பிரெய்லி முறையினை வெளியிட்டார் லூயிஸ் பிரெய்லி. சர்வதேச அரங்கில் பிரெய்லி எழுத்து முறைக்கு அங்கீகாரம் கிடைக்க பல ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் கல்வியாளர்களும் அரசும் இதை அங்கீகரிக்கவில்லை.அதன் மகத்துவம் புரிந்து உலகமே ஆதரித்த போது அதைப்பார்க்க லூயிஸ் பிரெய்லி உயிரோடு இல்லை.
சரியான அங்கீகாரம் இல்லாமலும், தனது பணியைக் கைவிடாது தொடர்ந்த லூயிஸின் உடல்நிலை எப்போதுமே கவலைக்கிடமாகவே இருந்தது. 29-ஆவது வயது முதல் சுவாசக் கோளாறு மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட லூயிஸ், 16 ஆண்டுகள் இந்நோயினால் துன்புற்று, 6 ஜனவரி 1852 அன்று உயிர் நீத்தார்.
இவர் இறந்த பின்னரே இவருடைய எழுத்துமுறை பரவலாகத் துவங்கியது.
இன்று பலமொழிகளில் இவரது முறை மொழிபெயர்க்கப்பட்டு, பயிற்றுவிக்கவும் படுகிறது. இசைக்கான கோடுகளாகவும் சிலவகை சுருக்கெழுத்துக்கும் மட்டுமின்றி அறிவியல் மற்றும் கணித இயலுக்கும் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பார்வை இல்லாவிட்டாலும் இந்த உலகுக்கே வழிகாட்டலாம் என்று உணர்த்திய லூயிஸ் பிரெய்லி பிறந்த தினமான ஜனவரி 4, உலக பிரய்லி தினமாக ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது!
உலகில் 110 கோடி பேர் பிறவியிலேயே பார்வையை இழந்து அல்லும் பகலும் இருளிலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஒன்றரை கோடி மனிதர்கள் பார்வையற்று இருக்கிறார்கள்.5.2 கோடிப்பேர் பார்வை குறைபாடு காரணமாக இருளில் இருக்கிறார்கள். இவர்களில் 3 லட்சத்து 20,000 பேர் குழந்தைகள். இவர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறார் லூயிஸ் பிரெய்லி!

No comments:
Post a Comment