Thursday, 9 January 2020

காலநிலை மாற்றத்தில் அல்பீடோ விளைவு:

shared by R R Srinivasan
9 hrs · 
No photo description available.
Samantha Ks
Yesterday at 2:06 PM · Chennaihttps://www.facebook.com/marxleninbarati?__tn__=%2Cd%2AF%2AF-R&eid=ARAFHHrAJrylan1nBB68Dh2LPWvk41PiGdzlbMa-hgE_63j2zH-vZrjP9JngiN3ladfWVuq5kUxsevFt&tn-str=%2AF


காலநிலை மாற்றத்தில் அல்பீடோ விளைவு:
நாம் வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க வெளிர் நிற ஆடைகளை அணிகிறோம்.ஏனென்றால் வெளிர் நிற ஆடைகள் அதிக அல்பீடோ மதிப்பைக் கொண்டிருக்கும். அல்பீடோ என்றால் என்ன?.
அல்பீடோ என்றால் லத்தீனில் வெண்மை என்று பொருள். அல்பீடோ மதிப்பு என்பது வெளியில் ஒரு பொருளின் பிரதிபலிக்கும்/எதிரொளிக்கும் திறனைக் குறிக்கிறது.அதாவது ஒரு பொருள் எந்த அளவிற்கு சூரிய ஒளிக்கதிரை பிரதிபலிக்கிறது எந்த அளவு உட்கிரகிக்கிறது என்பதைக் குறிக்கும்.இதன் மதிப்பு பூஜ்ஜியத்திலிருந்து ஒன்று வரை இருக்கும். ஒரு சிறந்த எதிரொளிக்கும் தளத்தின் அல்பீடோ மதிப்பு 1. முழுக் கரும் பொருளின் அல்பீடோ மதிப்பு 0. இயற்கையில் யாவும் கருப்பு, வெள்ளையாக மட்டும் இல்லையே.அதனால் அவற்றின் அல்பிடோ மதிப்பு 0விலிருந்து 1 வரை வேறுபட்ட பல மதிப்புகளைக் கொண்டிருக்கும். பூமியின் அல்பீடோ விளைவு, புவிப்பரப்பின் எதிரொளிக்கும் திறன் அதன் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.புவிப்பரப்பின் எதிரொளிப்பு திறன் குறையும் போது, சூரியனிலிருந்து வரும் வெப்பக் கதிர்வீச்சை அதிக அளவில் பூமி உட்கிரகிப்பதால் உலகின் வெப்பம் அதிகரிக்கும்.
பளபளப்பான வெண்பனி சூழ்ந்த பகுதிகள் பெருமளவில் வெப்பத்தை எதிரொளிக்கும். ஆனால் அந்தப் பகுதியின் பனி உருகும் போது அல்பீடோ குறைந்து விடும்.இது அதனால் அதிக அளவு சூரிய ஒளி உட்கிரகிக்கப்படுவதால் அப்பகுதியின் வெப்பம் அதிகரிக்கும். புவிவெப்பமயமாதலால் உருகும் துருவப் பனிப்பாறைகள் புவிவெப்பமாதலை மேலும் அதிகரிக்கும். இது பனி வெப்ப பின்னுட்டம் (snow temperature feedback)
என்றழைக்கப்படுகிறது.மேகங்கள் சூரிய ஒளியை பிரதிபலிக்கும், அதே நேரத்தில் புவியிலிருந்து வெப்பத்தை வெளியேர விடாமல் தக்க வைக்கும். எந்நேரத்திலும் பூமியை சுற்றிலும் பாதி அளவிற்கு மேகங்கள் சூழ்ந்துள்ளதால் அது கால நிலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அல்பீடோ விளைவு புவிவெப்பமாதலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்.ஆர்டிக் குறித்து கவலையளிப்பது என்னவென்றால் இப்பொழுது அது பூமியின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இருமடங்கு விரைவாக வெப்பமயமாகிறது. இதை விஞ்ஞானிகள் ஆர்டிக் பெருக்கம் (Arctic amplification) என்று அழைக்கிறார்கள். உலகின் மற்ற பகுதிகள் தொழிற்மயமாக்கம் ஏற்படுவதற்கு முன்னிருந்த வெப்பநிலையை விட ஒரு டிகிரி அதிகமாகும் போது, ஆர்க்டிக்கில் 2 டிகிரி அதிகமாகியுள்ளது, கிரன்லாந்தில் சில பகுதிகளிலும், சைபீரியாவிலும் இதே போல் உள்ளது. இதில் இரு கவலைக்குரிய விசயங்கள் உள்ளன. ஆர்க்டிக்கை சூழ்ந்துள்ள பனி, கடலில் மிதக்கும் பனி, வட துருவத்திலிருந்து ஆர்க்டிக்கை சுற்றிலும் உள்ள பனிப்பாறைகள் கடந்த 20 ஆண்டு காலத்தில் மிகவும் குறைந்துள்ளது.
இது மனிதன் தோற்றத்திற்கு பின் புவிச்சூழலில் ஏற்படுத்திய மிகப்பெரும் இயற்கை மாறுபாடு.ஆர்க்டிகின் பனி குறைந்த போது அதன் எதிரொளிக்கும் திறனும் குறைந்தது.பனி வெண்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பதால் அதனால் சூரிய ஒளியை பெருமளவில் பிரதிபலிக்க முடியும்.

உறைபனியின் அல்பீடோ மதிப்பு 0.5-0.7 என்பதால் 70% வரை ஒளிக்கதிரை பிரதிபலிக்க முடியும். புதுப்பனி அல்பீடோ மதிப்பு 0.9 வரை இருக்கும் என்பதால் 90%ஒளிக்கதிரை பிரதிபலிக்க முடியும்
ஆனால் உறைபனி உருகியதால் வெளிப்பட்ட கடல்பரப்பானது அதிக ஒளியை உட்கிரகித்துக் கொள்ளும். கடல் நீரின் அல்பீடோ மதிப்பு 0.06, அதாவது கடல் நீரால் 6% ஒளிக்கதிரை மட்டுமே பிரதிபலிக்க இயலும் என்பதால் அது ஒரு பின்னூட்ட விளைவை ஏற்படுத்தும்.அதிகமான கடல் நீர் பரப்பு உறைபனியுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே ஒளிக்கதிரை பிரதிபலிக்கிறது என்பதால் வெப்பத்தை அதிகரிக்கும்.வெப்பம் அதிகரிப்பதால், அதிக அளவில் ஆர்க்டிக் பனியை இழப்பது இன்னும் அதிக அளவில் ஆர்க்டிக் பனியிழப்பை ஏற்படுத்தும். 2019ல் இது வரை வரலாறு காணாத அளவிற்கு ஆர்க்டிக் பனி உருகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இது போல் அதிக அளவில் ஆர்க்டிக் பனி குறைந்து வருகிறது. கடல் பனி உருகுவதால் கடல் மட்டம் அதிகரிப்பதில்லை எனினும் இதனால் கிரீன்லாந்தின் பனிப் பாறைகள் பெருமளவு உருகியுள்ளது. இதனால் கடல்மட்டம் மற்றும் கடல்பரப்பும் அதிகரித்துள்ளது. இது பெருமளவு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.இதே போல் தான் அண்டார்க்டிக், பூமியின் மற்ற பகுதிகளும் பாதிக்கப்பட உள்ளது. ஆர்டிக்கில் போல் கிரீன்லாந்திலும் பின்னூட்ட விளைவால் பனி அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கிரீன்லாந்து பெரும் பனிப்பாறைகள் உருகும் போது அதன்.உயர மட்டம் குறையும்.குறைந்த உயரமட்டத்தில் வெப்பம் அதிகம் என்பதால், கிரீன்லாந்தின் மேல்பரப்பு உருகும் போது, அதன் பனிப்பாறைகளின் உயரமட்டம் குறைவதால் அது வெயில் காலத்தில் மேலும் அதிகமாக உருகும்
விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளில் பனிப் பாறைகளின் நிறம் கருமையடைவதைக் கண்டுள்ளனர்.பனிப்பொழிவுகள் குறைவதாலும், பாக்டீரியா, ஆல்கே போன்றவை வளர்வதாலும், புகைக்கரி படிவதாலும் பனியின் நிறம் மங்குவதால் அதன் பிரதிபளிக்கும் திறன் குறைகிறது.இந்தப் பின்னூட்ட விளைவால் கிரீன்லாந்து அதிகம் உருகுவது மேலும் கிரீன்லாந்து அதிகம் உருகுவதையே தூண்டுவதாக அமைகிறது…

R R Srinivasan
9 hrs

No comments:

Post a Comment