Sunday, 12 January 2020

ஒரு கூழில் இருந்தே அண்டமும் உருவானது - Raj Siva ·

https://www.facebook.com/rajsivalingam?__tn__=%2CdC-R-R&eid=ARCwgTP5VJyf-znq10tMWjkkKHZ7Q0ovuxx_5Wzkh2nkiquM8GFhxdSyRRlpB2UHZPO3QRN0DjnZkTHE&hc_ref=ARROYvYX_g-A8MgnQqFyREOEO9WbpscWTszonCz4Cv6GWw57OfAViNi9CewpB8K0dRU&fref=nf

நீங்கள் அனைவரும் சூப் (Soup) பருகியிருப்பீர்கள். கூழ் குடித்தல் என்றும் சொல்லலாம். அதுபோன்ற ஒரு கூழில் இருந்தே அண்டமும் உருவானது. பிக்பாங் பெருவிரிவு நடந்த கணத்தின், பத்து மில்லியனில் ஒரு பங்கு செக்கனின் பின் (0.00000001 செக் என்னும் மிகமிகச்சிறிய காலத்தில்) அங்கே ஒரு கூழ் உருவாகியது. அதைக் குவார்க்-குளுவான் கூழ் (quark-gluon plasma soup- QGP) என்பார்கள். ஆதிக்கூழ் (primordial soup) என்றும் அதைச் சொல்லலாம்.

இந்த ஆதிக்கூழிலிருந்தே, மெல்ல மெல்ல அண்டத்தில் பிண்டங்கள் தோன்றின. இது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள்ளச் சமீபத்தில் நடந்த பரிசோதனையில் வெற்றி கண்டுள்ளார்கள்.

சேர்னில் இருக்கும் பெரும் ஹாட்ரான் மோதியில் (அந்த மோதி இல்லை இது Large Hadron Collider - Cern) தங்கத்தின் புரோட்டோன்களை மோதவிட்டபோது, ட்ரில்லியன் சதமபாகை வெப்பநிலை தோன்றி, இந்தக் குவார்க்-குளுவான் பிளாஸ்மாவும் உருவாகியது. இதிலிருந்து பிக்பாங் கணத்தில் ஆதிக்கூழ் உருவானது உண்மைதானெனத் தீர்மானிக்க முடிகிறது.

“இந்தக் குவார்க்-குளுவான் பிளாஸ்மா, அண்டத்தையே உருவாக்குமளவுக்கு அப்படியென்ன அப்பாடக்கரா?” என்று நீங்கள் நினைத்தால், ஒரு தகவலை மட்டும் சொல்லி அமர்கிறேன்.

ஒரு கன செமீ (cubic centimeter) அளவுள்ள குகுபி (அதாங்க குவார்க்-குளுவான் பிளாஸ்மா), 40 பில்லியன் டன்களைவிட அதிக எடை கொண்டது. இப்போது புரிகிறதா குகுபியின் வீரியம் என்னவென்று?




Yalu 2.0 is feeling curious.


எப்போதாவது இதை நீங்கள் யோசித்தது உண்டா?

ஒரு முழுமையான சூரிய கிரகணத்தின்போது, சந்திரன் சிறு இடைவெளியில்லாமல் சூரியனை மறைக்கின்றது. அந்தக் காட்சிபற்றி ஏதாவது நீங்கள் விளங்கிக் கொண்டது உண்டா?

முழுமையான சூரிய கிரகணத்தின் போதுதான், பூமியிலிருந்து பார்க்கையில், சந்திரனும், சூரியனும் ஒரேயளவானவை என்பதைப் புரிந்து கொள்கிறோம். இது தற்செயலானதா? அல்லது சூரிய கிரகணம் பூமிக்குத் தேவையென்பதற்காக உருவான இயற்கையின் விளையாட்டா?

ஒரு நீலப் பவுர்ணமியின் போதோ, வேறு சில பவுர்ணமிகளின் போதோ சந்திரன் பெரிதாகக் காட்சி தந்தாலும், பொதுவாகச் சந்திரனும், சூரியனும் ஒரேயளவானவை. இதற்கு என்ன காரணம்?

பூமியிலிருந்து சூரியனின் தூரமானது, சந்திரனின் தூரத்தைவிட 400 மடங்குகள் அதிகமானது. அதே நேரத்தில் சூரியனின் அளவானது, சந்திரனைப் போல 400 மடங்குகள் பெரியது.

இதன் காரணத்தாலேயே, பூமியிலிருந்து பார்க்கும்போது, சந்திரனும், சூரியனும் ஒரேயளவாய்த் தெரிகின்றன



Rajendran Kumaresan  அந்த சூரிய தூர வெப்பமும் சந்திரன் குளிர்ச்சியும் தான் நமது உலகில் உயிர்களை உருவாக்கியது என்று சொல்கிறார்கள் சகோ.

No comments:

Post a Comment